ரஷ்யாவில் சக்திவாய்ந்த மிகப்பெரிய நிலநடுக்கம்.. வெடித்து சிதறி சாம்பலான பயங்கரம்

x

ரஷ்யாவில் சக்திவாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து எரிமலை வெடித்துச் சிதறியது. ரஷ்யாவின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள காம்சத்காவில், நில நடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 7-ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், கடலோரப் பகுதியில் இருந்து சுமார் 280 மைல் தொலைவில் அமைந்துள்ள ஷிவலுச் எரிமலை வெடித்துச் சிதறி சாம்பல் மற்றும் நெருப்புக்குழம்பு வெளியேறியது. இதில் காயமடைந்தவர்கள் குறித்து தகவல் வெளியாகவில்லை.


Next Story

மேலும் செய்திகள்