புதினுக்கு இடியை இறங்கிய சீனாவின் முடிவு? - பைடன் முன் உடைந்த உண்மை
ரஷ்யா - உக்ரைன் போர் தீவிரமாக நடந்து வரும் நிலையில், ரஷ்யாவுக்கு சீனா ஆயுத விநியோகம் செய்வதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இந்நிலையில் இத்தாலியில் நடைபெற்ற ஜி7 மாநாட்டில் அமெரிக்க அதிபர் பைடனுடன் செய்தியாளர்களை சந்தித்த ஜெலென்ஸ்கி ஜின்பிங் உடனான தொலைபேசி உரையாடல் குறித்து தெரிவித்தார்... அப்போது சீனா ரஷ்யாவுக்கு ஆயுதங்களை விற்காது என்று ஜின்பிங் தெரிவித்ததாக ஜெலென்ஸ்கி குறிப்பிட்டார்... அப்போது குறுக்கிட்ட பைடன், சீனா ஆயுதங்களை வழங்கவில்லை என்றாலும், அந்த ஆயுதங்களை உற்பத்தி செய்யும் திறன் மற்றும் அதைச் செய்வதற்கான தொழில்நுட்பம் சீனாவிடம் உள்ளது ரஷ்யாவுக்கு உதவும் என தெரிவித்தார். ஜின்பிங் ஜெலென்ஸ்கி இடையே கடைசியாக 2023 ஏப்ரலில் தொலைபேசி உரையாடல் நிகழ்ந்த நிலையில், ஓராண்டுக்குப் பிறகு மீண்டும் இருநாட்டுத் தலைவர்களும் உரையாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.