உயரும் உயிரிழப்பு எண்ணிக்கை" - இன்னும் 10 நாட்களில்.." - ஹவாய் ஆளுநர் சொன்ன பகீர் தகவல்
மவ் நகரில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயால் ஏராளமான வீடுகள், ரிசார்ட்கள் எரிந்து சாம்பலாயின. மோப்ப நாய்கள் உதவியுடன் தேடுதல் பணி நடைபெற்று வருகிறது. இதுவரை, 99 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ள ஹவாய் ஆளுநர் ஜோஸ் கிரீன், இந்த உயிரிழப்பு அடுத்த 10 நாட்களில் இரட்டிப்பாகும் என்றார். காட்டுத்தீ ஏற்பட்ட இடங்கள் அதிக சூடாக இருப்பதால், தேடுதல் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். லஹைனா பகுதியில் 85 விழுக்காடு காட்டுத்தீ கட்டுப்படுத்தியுள்ளதாகவும், ஒரு சில இடங்களில் தொடர்ந்து தீ எரிந்து வருவதாகவும் ஆளுநர் ஜோஸ் கிரீன் கூறியுள்ளார்.
Next Story