ஜெர்மனி, பிரான்ஸ் நாடுகளுக்கு புதின் எச்சரிக்கை

x


உக்ரைனுக்கு ஆயுதம் வழங்கும் ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் நாடுகளுக்கு ரஷ்யா அதிபர் புதின் எச்சரிக்கை விடுத்துள்ளார். ரஷ்ய படைகளை எதிர்கொள்ளும் உக்ரைனுக்கு, இங்கிலந்து, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் ஆயுதங்களை வழங்கி வருகின்றன. இந்நிலையில், உக்ரைனுக்கு ஜெர்மனி, பிரான்ஸ் நாடுகள் ஆயுதம் வழங்குவதற்கு ரஷ்ய அதிபர் புதின் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தொடர்ந்து ஆயுதங்களை வழங்குவதால், மேற்கத்திய நாடுகளுக்கு ஆதரவாக இருக்கும் உக்ரைனில் நிலைமையை மேலும் சீர்குலைக்கும் என அவர் எச்சரித்துள்ளார்.



Next Story

மேலும் செய்திகள்