காட்டுத்தீக்கு இரையான காப்புக்காடுகள்...15 "விகுனாக்கள்" உடல் கருகி உயிரிழப்பு...
காட்டுத்தீக்கு இரையான காப்புக்காடுகள்...15 "விகுனாக்கள்" உடல் கருகி உயிரிழப்பு...
தென் அமெரிக்க நாடான பெருவில் பெரும் காட்டுத்தீப்பரவலால் விகுனா என்றழைக்கப்படும் தென் அமெரிக்க ஒட்டக இனத்தைச் சேர்ந்த விலங்குகள் 15 உடல் கருகி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது...
தீயைக் கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் திணறி வரும் நிலையில், மேலும் பல விகுனாக்கள் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளன...
சுமார் 600 விகுனாக்கள் சுற்றித் திரிந்து வந்த 90 சதவீத காப்புக் காடுகள் தீக்கிரையாகின...
இதனிடையே சாம்பலான வனங்களைக் கடந்து கடும் அச்சத்துடன் விகுனாக்கள் உயிரைக் காக்க தப்பி ஓடும் காட்சிகள் காண்போரைக் கலங்கச் செய்கின்றன.
Next Story