அதிபர் வேட்பாளர் டிரம்ப் பங்கேற்ற கூட்டத்தில் இருவர் மயக்கம்

x

அமெரிக்காவின் பென்சில்வேனியா பகுதியில், அதிபர் வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் பங்கேற்ற கூட்டத்தில் இருவர் மயக்கமடைந்தனர். அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் டெனால்ட் டிரம்ப் போட்டியிடுகிறார். இந்நிலையில், பென்சில்வேனியாவில் உள்ள அரங்கம் ஒன்றில் டிரம்ப் பங்கேற்ற கூட்டம் நடைபெற்றது. இதற்காக அவரது ஆதரவாளர்கள் முன்கூட்டியே திரண்டனர். இந்நிலையில், டிரம்ப் உரையாற்றிக்கொண்டிருந்தபோது இருவர் திடீரென மயக்கமடைந்தனர். இதனால் தனது பேச்சை நிறுத்திய டிரம்ப், முதலுதவி அளிக்க நடவடிக்கை மேற்கொண்டார். அதில் ஒருவர் ஸ்ட்ரெச்சர் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.


Next Story

மேலும் செய்திகள்