அதிபர் புதின் போட்ட அதிரடி உத்தரவு - ரஷ்யாவுடன் இணைக்கப்பட்ட உக்ரைன்
அதிபர் புதின் போட்ட அதிரடி உத்தரவு - ரஷ்யாவுடன் இணைக்கப்பட்ட உக்ரைன்
ரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ள 4 உக்ரைன் பிராந்தியங்களில் ராணுவ சட்டத்தை அமல் படுத்தி ரஷ்ய அதிபர் புதின் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கடந்த பிப்ரவரியில் தொடங்கிய ரஷ்ய படையெடுப்பு கிட்டத்தட்ட 8 மாதங்களாகத் தொடர்ந்து வருகிறது.
இந்நிலையில், உக்ரைனில் உள்ள லுஹான்ஸ்க், டொனெட்ஸ்க், கெர்சன், ஜப்போரிஜியா ஆகிய 4 பிராந்தியங்களையும் ரஷ்யா சர்வதேச சட்டங்களை மீறி வாக்கெடுப்பு நடத்தி தன்னுடன் இணைத்துக் கொண்டது.
இந்நிலையில், இணைக்கப்பட்ட 4 பகுதிகளிலும் ரஷ்ய அதிபர் புதின் ராணுவ சட்டத்தை அமல்படுத்தி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மேலும் அந்த பிராந்தியங்களை இணைத்து உக்ரைனில் ரஷ்யாவின் போர் முயற்சிகளை ஊக்குவிக்க பிரதமர் மிகைல் மிஷுஸ்டின் தலைமையில் ஒரு சிறப்பு ஒருங்கிணைப்பு குழுவை அமைக்குமாறு புதின் தனது பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர்களுக்கு வலியுறுத்தியுள்ளார்.