போலீஸ் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட பிரபல தொலைக்காட்சி - பரபரப்பு காட்சிகள்

x

ஈக்வடார் நாட்டில் போதைப்பொருள் கும்பல் தலைவன் சிறையில் இருந்து தப்பிய பிறகு தொலைக்காட்சி நேரலையின் போது நிறுவனத்திற்குள் துப்பாக்கியுடன் வன்முறை கும்பல் உள்ளே புகுந்த நிலையில், அவர்களை போலீசார் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் வீடியோ காட்சிகளை சம்பந்தப்பட்ட சேனல் ஒளிபரப்பியுள்ளது... துப்பாக்கிகள், கையெறி குண்டுகளுடன் பிரபல தொலைக்காட்சி நிறுவனத்திற்குள் புகுந்து ஊழியர்களைத் தாக்கி அவ்விடத்தை வன்முறை கும்பல் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்த நிலையில், அங்கு விரைந்த போலீசார் வன்முறை கும்பலைக் கைது செய்தனர்... இக்கும்பல் அந்நாட்டின் அதிபர் நோபோவாவால் பயங்கரவாத அமைப்பு என்று குறிப்பிடப்பட்ட அமைப்பைச் சார்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்