வீட்டிற்குள் நுழைந்து கருப்பின பெண்ணை சுட்டுக் கொன்ற போலீசார்...வீடியோவை வெளியிட்ட போலீசார்

x

அமெரிக்கா

வீட்டிற்குள் நுழைந்து கருப்பின பெண்ணை சுட்டுக் கொன்ற போலீசார்

கொலை தொடர்பான வீடியோவை வெளியிட்ட போலீசார்

அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாகாணத்தில் வீட்டிற்குள் புகுந்து கருப்பின பெண் ஒருவரை போலீசார் சுட்டுக் கொன்ற வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 6-ம் தேதி நள்ளிரவில், சோனியா மஸ்ஸி என்ற கருப்பின பெண், காவல்துறை உதவி எண்ணான 911-க்கு அழைத்துள்ளார். அப்போது, அங்கு 2 காவலர்கள் வந்துள்ளனர். வீட்டிற்குள் சென்று, சோனியா மஸ்ஸிடம் பேசிக் கொண்டிருக்கும் போது, அவர், அடுப்பில் இருக்கும் வெந்நீரை எடுத்து வைக்கச் செல்கிறார். அப்போது திடீரென காவலர் ஒருவர் அவரை துப்பாக்கியால் சுடுகிறார். இந்த காட்சிகள், காவலர் உடலில் பொருத்தியிருந்த கேமராவில் பதிவாகியுள்ளன. இந்த சம்பவத்தில் தொடர்புடைய காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இல்லினாய்ஸ் போலீசார், கொலை சம்பவம் தொடர்பான வீடியோவை வெளியிட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்