3வது முறை PM ஆனதும் முதல் வெளிநாட்டு பயணமாக இத்தாலி செல்லும் பிரதமர் மோடி
ஜி-7 உறுப்பு நாடுகளின் உச்சிமாநாடு இத்தாலி நாட்டின் அபுலியாவில் வரும் 13ம் தேதி தொடங்கி 15ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இத்தாலி பிரதமரின் அழைப்பை ஏற்று பிரதமர் மோடி இந்த மாநாட்டில் பங்கேற்கிறார். தொடர்ந்து 3வது முறை பிரதமராக பொறுப்பேற்ற பிறகு அவர் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டுப் பயணம் இதுவாகும். இதனிடையே, ஜி-7 உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்பது, கடந்த ஆண்டு இந்தியாவின் தலைமையின்கீழ் நடைபெற்ற ஜி-20 உச்சிமாநாட்டின் முடிவுகளைப் பின்தொடர்வதற்கு வாய்ப்பளிக்கும் என வெளியுறவுத்துறை செயலாளர் வினய் குவாட்ரா கூறியுள்ளார். மாநாட்டில் பங்கேற்கும் பிரதமர் மோடி,, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரான்ஸ் அதிபர் இமானுவெல் மேக்ரான், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உள்ளிட்ட தலைவர்களை சந்தித்துப் பேசவுள்ளார்.
Next Story