’இது மோடி மேளம்’ - சிங்கப்பூரில் இறங்கியதும் மோடியின் மாஸ் சம்பவம்
புருனே பயணத்தை முடித்துக் கொண்டு சிங்கப்பூருக்கு சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. லயன் நகரில் தரையிறங்கிய பிரதமர் மோடியை அந்நாட்டு உள்துறை அமைச்சர் கே. சண்முகம் வரவேற்றார். அங்கிருந்து அவர் தங்கும் 5 ஸ்டார் ஓட்டலுக்கு சென்றவருக்கு சிங்கப்பூர் வாழ் இந்தியர்கள் உற்சாக வரவேற்பை அளித்தனர். கலை நிகழ்ச்சிகளை பார்த்து ரசித்த பிரதமர் மோடி, இந்திய மக்களோடு புகைப்படம் எடுத்துக்கொண்டார். அப்போது டோல் இசைக்கும் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி எல்லோரையும் மகிழ்வித்தார்
Next Story