பெட்ரோ, டீசல் விலை வரலாறு காணாதளவு உயர்வு.. பாக். மக்கள் தலையில் விழுந்த பேரிடி

x

பாகிஸ்தான் வரலாற்றிலேயே முதன்முறையாக பெட்ரோல், டீசல் விலை 300 ரூபாயைக் கடந்த நிலையில், மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்... பாகிஸ்தானின் இடைக்கால பிரதமர் அன்வருல் ஹக் கக்கர் தலைமையிலான அரசு, பெட்ரோல் விலையை 14 ரூபாய் 91 காசுகளும், டீசல் விலையை 18 ரூபாய் 44 காசுகளும் உயர்த்தியுள்ளது... இதனால் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 305.36 ரூபாயாகவும், ஒரு லிட்டர் டீசல் விலை 311.84 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது... மின் கட்டண உயர்வால் பேரதிர்ச்சியில் ஆழ்ந்திருந்த பாகிஸ்தான் மக்களுக்கு பெட்ரோ, டீசல் விலை உயர்வு பேரிடியாக இறங்கியுள்ளது...


Next Story

மேலும் செய்திகள்