பாகிஸ்தானில் அடுத்த ஆண்டு நாடாளுமன்ற பொது தேர்தல்.. வெளியான அறிவிப்பு | Pakistan

x

பாகிஸ்தானில் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம்

11-ந் தேதி நாடாளுமன்ற பொது தேர்தல்

நடைபெறும் என்று அந்நாட்டு தேர்தல்

ஆணையம் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானில் கடும் பொருளாதார நெருக்கடி மற்றும்

அரசியல் குழப்பம் நிலவி வந்த நிலையில் பிரதமர்

இம்ரான்கானின் ஆட்சி கவிழ்ந்து அவர் கைது

செய்யப்பட்டார். இதையடுத்து கராச்சி உள்ளிட்ட

பல நகரங்களில் வன்முறை வெடித்தது.

பிரதமர் ஷபாஸ் ஷெரிப் தலைமையில் பொறுப்பேற்ற

இடைக்கால அரசாங்கம் பரிந்துரையின் பேரில் 3

நாட்களுக்கு முன்னதாக கடந்த ஆகஸ்ட் 10 ந்தேதி

பாகிஸ்தான் நாடளுமன்றம் கலைக்கப்பட்டது.

அந்நாட்டு அரசியலமைப்பு சட்டத்தின்படி நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதிலிருந்து 90 நாட்களில் அதாவது வரும் 7 ந்தேதிக்குள் பொது தேர்தல் நடைபெற்றிருக்க வேண்டும்.

ஆனால் தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியிடப்படாததால் உச்சநீதிமன்றத்தில் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்நிலையில் மக்கள் தொகைக்கேற்ப தொகுதி மறுவரையரை பணிகள் நடைபெற்று வருவதால் பாகிஸ்தானில் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம்

11-ந் தேதி நாடாளுமன்ற பொது தேர்தல்

நடைபெறும் என்று அந்நாட்டு உச்சநீதிமன்றத்தில்

தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்