உலகே உற்றுநோக்கும் ஒலிம்பிக் வரலாற்றிலே முதல்முறையாக சென் நதிக்கரையில்..

x

4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் ஒலிம்பிக் போட்டி, பிரான்ஸ் தலைநகர் பாரிஸின் சென் நதிக்கரையில் கோலாகலமாக தொடங்கியது...

குறிப்பாக, 100 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்ஸில் மீண்டும் கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகள் அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளன. இந்தப் போட்டிகள் ஆகஸ்ட் மாதம் 11-ஆம் தேதி வரை நடத்தப்படவுள்ளன. மொத்தம் 32 விளையாட்டு போட்டிகளில் சுமார் 10 ஆயிரத்து 700-க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்கவுள்ளனர். ஏற்கனவே, கால்பந்து, வில்வித்தை உள்ளிட்ட போட்டிகள் முன்னதாக தொடங்கிவிட்டாலும், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் அதிகாரப்பூர்வமாக ஒலிம்பிக்கை தொடங்கி வைத்தார். எப்போதும் இல்லாத வகையில், ஒலிம்பிக் வரலாற்றில் முதன்முறையாக சென் நதியில் போட்டியின் தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. இந்தியா தரப்பிலிருந்து 70 வீரர்கள் 47 வீராங்கனைகள் என மொத்தம் 117 பேர் 16 போட்டிகளில் களம் காண்கின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்