உயிருக்கு பயந்து 16வது மாடியிலிருந்து குழந்தைகளை தூக்கி வீசிய பெற்றோர் - நடுங்கவிடும் காட்சிகள்
கஜகஸ்தானில் தீவிபத்து ஏற்பட்ட கட்டத்தின் மாடியில் இருந்து குழந்தைகளை பெற்றோர் தூக்கி வீசிய காட்சிகள் வெளியாகி உள்ளன. அல்மாட்டி நகரில் உள்ள 16 தளங்கள் கொண்ட குடியிருப்பில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. இதனால் செய்வதறியாது திகைத்த பெற்றோர், குழந்தைகளை மாடியில் இருந்து கீழே வீசியதோடு தாங்களும் குதித்தனர். அப்போது, கீழே இருந்த பொதுமக்கள் சிலர் மெத்தை, போர்வை உள்ளிட்டவற்றை கொண்டு பிடிக்க முயற்சித்தனர்.
Next Story