ஒருபக்கம் கடல் ஒருபக்கம் காடு அடடா என்ன ஒரு ரம்மியமான நாடு... பப்புவா நியூ கினி

x

பப்புவா நியூ கினி...600 தீவுகளாலான ஒரு பெரிய தீவுனு தான் சொல்லனும்... இந்த நாட்டோட மொத்த சைஸ், நம்ம தமிழ் நாட்டையும், மத்திய பிரதேசத்தையும் சேர்த்தா வந்துடும் .

இந்த நாட்டுக்கு போறது நேரடி பிளைட்லாம் இல்ல... டவுன் பஸ் மாதிரி மாறி மாறி தான் போகனும்....பொதுவா இங்க டூரிஸ்ட் யாரும் வரமாட்டாங்க...ஏன்னா பயணத்திற்கு அவ்ளோ சிரமமான ஒரு நாடு...பயப்படாதீங்க அங்க போய் இறங்குனதும் அந்த சிரமம் எல்லாம் பறந்துடும்....

ஏன்னா இந்த நாட்டுல உள்ள விஷியங்கள் அப்படி....

பப்புவா நியூ கினிய சுருக்கமா PNG-னு அழைக்குறாங்க.... இந்த நாட்டுல வெறும் 20 சதவீதம் தான் நகரம் இருக்கு... மத்த 80 சதவீதமும் கிராமம் தான்.... அதுவும் பழங்குடியின மக்கள் வசிக்குற சவாலான காடுகள்...

ஆனா அந்த ஆபத்தான இயற்கை வளங்கள் தான் இந்த நாட்டோட பொருளாதாரத்த தூக்கி நிறுத்துது... சுமார் 7000ஆண்டுகளுக்கு முன்னாடியே பழங்குடியின மக்கள் இங்க விவசாயம் பண்ண ஆதாரம்லாம் இருக்காம்.

.கடவுளெனும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி விவசாயி....

இப்பேற்பட்ட வரலாற்று பின்புலத்த கொண்ட இந்த மக்கள் ரொம்பவே பின் தங்கி தான் இருக்காங்க... எந்த அளவுக்குனா இங்க அதிக அளவுல ரோடுலாம் இல்ல... இங்க சாப்பிட காசு குடுத்தா கன்னத்துலயே குடுப்பாங்க.... ஏன்னா? இன்னும் இங்க பண்டமாற்று முறைதான் புழக்கத்துல இருக்கு...

அதுலயும் இங்க பன்றிகளுக்கு கிராக்கி அதிகம்... ஒரு குட்டி பன்றிய குடுத்தா அதுக்கு பதிலா காரையே தருவாங்களாம்... அதுமட்டுமில்லங்க பன்றி குடுத்தா பொன்னையே கல்யாணம் பண்ணி வைப்பாங்கனா பாத்துக்கோங்க...

இருந்தாலும் இந்த நாட்டுல இருக்கறவங்களுக்கு வாய் கொஞ்சம் நீளம்னு நெனைக்குறேன்... ஏன்னா இந்த குட்டி நாட்டுல மொத்தம் 890 மொழி பேசுறாங்க....

இந்த நாட்டின் பெரிய பரப்பளவு கொண்ட நகரம்னா அது Port Moresby தான்... அதுதான் PNG-யோட தலை நகரமும் கூட...

காஃபி, பாமாயில் இங்க பிரதான ஏற்றுமதி பொருளா இருக்கு...

இப்படிப்பட்ட நாட்டுக்கு கவர்னர் நம்ம தமிழ் நாட்ட சேர்ந்தவர்னு சொன்னா நம்ப முடியுதா?

ஆமா... சசீந்திரன் முத்துவேல் தான் இந்த நாட்டு கவர்னரா மக்களால தேர்வு செய்யப்பட்டிருக்காரு...

அதுமட்டுமில்லாம திருக்குறள இந்த நாட்டோட அதிகாரப்பூர்வ மொழியான தோக் பிசின் என்ற மொழியில வெளியிட்டு இருக்காங்க... அத வெளியிட்டவர் நம்ம பிரதமர் நரேந்திர மோடி...

ஓவர் டீட்டைல் ஒடம்புக்கு ஆகாதுனு சொல்ற மாதிரி, போதுமான வரைக்கும் விவரம் தெரிஞ்சிக்கிட்டோம்.... இனிமே என்ன... ஊர் சுத்த கிளம்பலாம் வாங்க...

இந்த ஊர சுத்தி பாக்கனும்னா தனிதனியா எங்கயும் போகனும்னு அவசியம் இல்லை.... ஏன்னா இந்த ஊரே ஒரு சுற்றுலா மையம் தான்....

அப்படி முதல்ல நாம சுத்தி பாக்க போற இடம் தலை நகர் port Moresby இருக்குற the National Museum & Art Gallery.

என்னங்க ஒரே பழைய பண்ட பாத்திரமா மாட்டி வச்சி இருக்காங்க....

இங்க பாக்குற ஒவ்வொரு பொருளும் பப்புவா நியூ கினி வரலாற்று சிறப்புகள் தான்... pngக்கு 1975 ல தான் சுதந்திரம் கிடச்சிது... அதே ஆண்டு தான் இந்த மிசியூசியமும் திறக்கப்பட்டிருக்கு...

பப்புவா நியூ கினியர்களின் வாழ்வியல் முறை சார்ந்த பொருட்கள், போருக்கு பயன்படுத்துன ஆயுதங்கள், வேட்டையாட பயன்படுத்துன ஈட்டிகள், நாட்டு துப்பாக்கிகள், கலாச்சாரத்தை வெளிக்கொணரும் ஆபரணங்கள், ஆடைகள், இப்படி 30 ஆயிரம் வரலாற்று சின்னங்கள் இந்த மியூசியத்துல பாதுகாக்கப்படுது....

வரலாற்று ஆய்வாளர்களுக்கும் பழமை விரும்பிகளுக்கும் இந்த மியூசியம் நிச்சயமா ஒரு வரப்பிரசாதம் தான்.... முக்கியமா சொல்லனும்னா இந்த மியூசியத்த சுத்தி பாக்க என்ட்ரி பீஸ் கிடையாது. கால் டிக்கட், அர டிக்கட், முழு டிக்கட் நு எல்லாருக்கும் பிரீ தான்....

மியூசியத்தை ஒரு ரவுண்டு அடிச்சிட்டு அடுத்ததா நாம பாக்க போற இடம்,

Varirata National park....

பார்க்னு சொன்னதும் வயசானவங்க வாக்கிங் போற இடம்னு நெனைக்காதீங்க.... இது காடு மலை ஏறி டிரக்கிங் போற ஒரு திகில் ஸ்பாட்....


Next Story

மேலும் செய்திகள்