இரவோடு இரவாக கலைந்த பாக்.நாடாளுமன்றம் | pakistan
இரவோடு இரவாக கலைந்த பாக்.நாடாளுமன்றம்
கடும் பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் ஸ்திரமற்ற சூழலில் பாகிஸ்தான் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது.பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் ஊழல் குற்றச்சாட்டில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அவர் தேர்தலில் போட்டியிட ஐந்து ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த பரபரப்பான சூழலில், தற்போதைய பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப்-ன் பரிந்துரையின் பேரில், இரவோடு இரவாக நாடாளுமன்றத்தை கலைத்து அந்நாட்டு அதிபர் ஆரிஃப் ஆல்வி உத்தரவு பிறப்பித்துள்ளார். பாகிஸ்தான் நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் முடிய மூன்று நாட்களே இருந்த நிலையில், முன்கூட்டியே கலைக்கப்பட்டுள்ளதால், 90 நாட்களுக்குள் தேர்தல் நடத்தப்படும் என தெரிகிறது. அதேசமயம், தேர்தல் நடத்துவதற்கு தாமதம் ஏற்பட்டால் மக்களின் கோபம் மேலும் அதிகரிப்பதோடு, நிச்சயமற்ற தன்மை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.