அரை மணி நேரத்தில் பிரமாண்ட Mall-ஐ சூறையாடிய மக்கள்... உலகையே அதிரவைத்த ஒற்றை வீடியோ
இணையத்தை ஆக்கிரமித்து வைரலாகி வரும் வீடியோ ஒன்று, உலக நாடுகள் மத்தியில் பேசு பொருளாகி சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இது குறித்து விரிவாக பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்...
பவுன்சர்கள் போல் காட்சியளிக்கும் நபர்கள் கூட்டத்தை உருட்டுக் கட்டையால் தாக்கி கலைத்தும், அதனையும் மீறி கண்ணாடியை உடைத்து கட்டடத்திற்குள் மக்கள் நுழையும் இந்த காட்சிகளும் இணையத்தை ஆக்கிரமித்து வைரலாகி வருகிறது..
பாகிஸ்தானின், கராச்சியில்... "ட்ரீம் பஜார்" என்ற பெயரில் மிகப்பெரிய வணிக வளாகத்தை கட்டியிருக்கிறார் தொழிலதிபர் ஒருவர்...
வணிக வளாகம் முழுவதும் கடைகள் திறக்கப்பட்டு, பெரும் எதிர்பார்ப்புடன் திறப்பு விழா தேதி அறிவிக்கப்பட்டிருக்கிறது...
இந்த மால், பழை துணிகள் மற்றும் பொருள்கள் விற்பனை செய்யும் மால் என கூறப்படுகிறது..
இந்நிலையில், திறப்பு விழா சலுகையாக பொருள்களின் ஆரம்ப விலை இந்திய மதிப்பில் 15 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டதை அடுத்து பொதுமக்கள் ஏராளமானோர் மாலின் முன் திரண்டிருக்கின்றனர்...
கூட்டத்தை பார்த்து மிரண்டு போன ஊழியர்கள், நேரப்போகும் விபரீதத்தை உணர்ந்து மக்களுடன் மல்லுக்கட்டி அவர்களை விரட்டியடித்திருக்கின்றனர்...
அதனையும் மீறி மாலுக்குள் நுழைந்த மக்கள் கூட்டம், வணிக வளாகம் முழுவதையும் சூறையாடி.. அங்கிருந்த துணிமணிகள் மற்றும் பொருள்கள் என அனைத்தையும் முப்பதே நிமிடங்களில் வாரி சுருட்டி தப்பி ஓடியிருக்கின்றனர்...
பணவீக்கம் அதிகரித்து, பொருளாதார நிதி நெருக்கடியில் சிக்கி பாகிஸ்தான் அல்லல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது...
இந்நிலையில், மிக பிரம்மாண்ட பொருட் செலவில் அங்கு திறக்கப்பட்ட மால் ஒன்றை, வெறும் 30 நிமிடங்களிலே மக்கள் சூறையாடி சல்லி சல்லியாக நொறுக்கிய இந்த சம்பவம் உலக நாடுகள் மத்தியில் பேசு பொருளாகி இருக்கிறது...