10 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தான் செல்லும் ஜெய்சங்கர்.. என்ன விஷயம்னு தெரியுமா? | India Pakistan

x

பாகிஸ்தானில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் இந்தியா பங்கேற்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் இந்தியா சார்பில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்பார் என வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது. அக்டோபர் 15, 16ம் தேதிகளில் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு இஸ்லாமாபாத்தில் நடைபெறுகிறது. மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்க பாகிஸ்தான் அழைப்பு விடுத்திருந்தது. மற்ற உறுப்பு நாடுகள் பங்கேற்பது உறுதி செய்யப்பட்டாலும், இந்தியா பங்கேற்குமா? இல்லையா? என்ற கேள்வி தொடர்ந்தது.

இப்போது மாநாட்டில் பிரதமர் மோடிக்கு பதிலாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். 10 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியுறவு அமைச்சர் ஒருவர் இஸ்லாமாபாத் செல்கிறார். கடைசியாக கடந்த 2015ம் ஆண்டு அப்போதைய வெளியுறவு அமைச்சராக இருந்த சுஷ்மா சுவராஜ் இஸ்லாமாபாத் சென்றிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்