கிம் ஜாங் உன் கையில் எடுத்த மிகவும் ஆபத்தான முடிவு - அச்சத்தில் உலகநாடுகள்
கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்கக்கூடிய ஏவுகணை சோதனை வீடியோவை வடகொரியா வெளியிட்டுள்ளது. புதிதாக திட எரிபொருள் கொண்ட கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்கக் கூடிய ஹ்வாசங்-19 என்ற ஏவுகணையை வடகொரியா சோதனை செய்தது. இதனை, வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் அவருடைய மகள் மற்றும் ராணுவ அதிகாரிகள் பார்வையிட்டனர். இந்த ஏவுகணை இதற்கு முன்பு ஏவப்பட்டதை விட விண்ணில் நீண்ட தூரம் பயணித்ததாக, தென் கொரியா மற்றும் ஜப்பான் தெரிவித்துள்ளன. இந்நிலையில், ஏவுகணை ஏவப்படுவதையும், அதனை மகளுடன் சேர்ந்து அதிபர் கிம் ஜாங் உன் பார்க்கும் வீடியோவை வடகொரியா வெளியிட்டுள்ளது.
Next Story