பதறியடித்து ஓடி வந்த பெண் சீடர்.. மீண்டும் தலைப்பு செய்தியான நித்தி

x

பதறியடித்து ஓடி வந்த பெண் சீடர்.. மீண்டும் தலைப்பு செய்தியான நித்தி

தலைமறைவாக இருந்து கொண்டு.. இந்தியாவின் நீதித்துறைக்கே நித்தியானந்தா சவால் விடுவதாக நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது... இதன் பின்னணி குறித்து விரிவாக பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்...

உள்ளூர் செய்திகளில் தலைப்பு செய்தியாகி வந்த சர்ச்சை சாமியார் நித்தியானாந்தா... கைலாசா என்ற தனித் தீவையே விலைக்கு வாங்கியிருப்பதாக சொல்லி உலக பேமஸ் ஆன கதை அனைவரும் அறிந்ததே..

கைலாசாவுக்கான தனி பாஸ்போர்ட், கரன்சிகளை அறிவித்த அவர்.. கடைசி வரை கைலாசா தீவு எங்கிருக்கிறதென்பதை சொல்லாமல் இருக்கும் நிலையில்தான், மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வின் இந்த கருத்து...

நித்தியானந்தாவின் சீடரான கர்நாடகாவை சேர்ந்த சுரேகா உட்பட மூவர் மீது... தேனி மாவட்டம் சேத்தூர் போலீசார் நில மோசடி பிரிவின் கீழ் வழக்குபதிவு செய்துள்ளனர்...

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே, கணேசன் என்பவருக்கு சொந்தமான 45 ஏக்கர் நிலத்தை மூவரும் நித்தியானந்தாவுக்கு சொந்தமான நிலம் எனக் கூறி அபகரிக்க முயன்றதாக கொடுக்கப்பட்ட புகாரில்தான் இந்த வழக்கு பதிவு..

அதுவும் நித்தியானந்தாவின் அறிவுறுத்தலின் பேரில் மூவரும் நில அபகரிப்பு முயற்சியில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டது..

இந்நிலையில், தாங்கள் அது போன்று எந்தவித முயற்சியும் மேற்கொள்ளவில்லை எனவும், பொய்யான புகாரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது எனவும் கூறிய சுரேகா, வழக்கில் இருந்து தனக்கு முன் ஜாமின் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருக்கிறார்.

இந்த மனு நீதிபதி பரத சக்கரவர்த்தி முன் விசாரணைக்கு வந்தது...

அப்போது, இந்தியாவின் நீதித்துறைக்கே நித்தியானந்தா சவால் விடுவதாகவும், நித்தியானாந்தா மீது பல வழக்குகளும், அந்த வழக்குகளில் அவருக்கு பிடிவாரண்ட்டும் உள்ள நிலையில், நித்தியானாந்தா நீதிமன்றங்களுக்கே வருவதில்லை என நீதிபதி தெரிவித்திருக்கிறார்...

இப்படி இருக்க, நித்தியானந்தாவின் சொத்துக்களை மட்டும் இந்தியன் ஜூடிசியல் பாதுகாக்க வேண்டுமா? எனவும் கேள்வி எழுப்பி இருக்கிறார்..

தொடர்ந்து, மனுதாரர் வழக்கறிஞர் என்பதால் இந்த இட விகாரத்தில் இனி தலையிட மாட்டேன் என அவர் உத்தரவாத பத்திரம் தாக்கல் செய்தால்... முன் ஜாமின் வழங்குவது குறித்து உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும் எனக் கூறி வழக்கை ஒத்தி வைத்திருக்கிறார் நீதிபதி..


Next Story

மேலும் செய்திகள்