தொட கூடாத இடத்தில் தொட்டது இஸ்ரேல்.. முகம் மாறும் போர்
சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸில், ஈரான் தூதரகத்தின் மீது இஸ்ரேல் ராணுவம் வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது. இதில், பாலஸ்தீனிய தலைவர்கள் உடனான கூட்டத்தில் பங்கேற்ற சென்ற ஈரானிய படை தளபதி முகமது ரெசா ஷகாதி உட்பட 7 பேர் கொல்லப்பட்டுள்ளனர். பலர் படுகாயமடைந்துள்ளனர். அதே நேரத்தில், சிரியாவுக்கான ஈரானிய தூதர் ஹொசைன் அக்பாரிக்கு எந்த காயமும் ஏற்படவில்லை. ஈரானின் அரசு அலுவலகத்தின் மீது நடத்தப்பட்ட முதல் தாக்குதல் என்ற ஹொசைன் அக்பாரி, இந்தத் தாக்குதல் சர்வதேச விதிகளுக்கு எதிரானது என குற்றம் சாட்டியுள்ளார். இந்த தாக்குதலுக்கு ஈரான் வெளியுறவுத்துறையும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
Next Story