போரில் விழுந்த ஹிஸ்புல்லா தலை.. இஸ்ரேல் பிரதமருக்கு அவசர ஆபரேஷன்

x

இஸ்ரேலிய ராணுவம் ஹிஸ்புல்லா தளபதியைத் தாக்கிக் கொன்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது... லெபனானில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் ஹிஸ்புல்லாவின் ரத்வான் படைகளின் டேங்க் எதிர்ப்பு ஏவுகணைப் பிரிவின் தளபதியான இஸ்மாயில் அல்-ஜின் இஸ்ரேல் படைகளால் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனக்கு அறுவை சிகிச்சை நடக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்... நெதன்யாகுவிற்கு இதயத் துடிப்பு சீராக இல்லாததால் பேஸ்மேக்கர் கருவி பொருத்தப்பட்டிருந்த நிலையில், அதன் பிறகு ஒரு வருடத்திற்குள்ளாகவே அவருக்கு தற்போது குடலிறக்க அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட உள்ளது... இந்த சிகிச்சையை வெற்றிகரமாக முடித்தபிறகு மீண்டும் விரைவில் பணிக்குத் திரும்பவுள்ளதாகவும் நெதன்யாகு குறிப்பிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்