மிகவும் ஆபத்தான கொல்லக்கூடிய Mpox வைரஸ்.. அறிகுறிகள் என்ன?.. பீதியில் மக்கள்

x

ஆப்பிரிக்க நாடுகளில் நீண்ட காலமாக காணப்பட்ட குரங்கு அம்மை வைரஸ், Clade 1 மற்றும் Clade 2 என இருவகையில் இருக்கிறது. இதில் Clade 1 குரங்கு அம்மை வைரஸ் அபாயகரமான வைரசாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் 10% பேரை கொல்லக்கூடிய வைரசாகவும் ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர். இப்போது Clade 1 குரங்கு அம்மை வைரஸ் ஆப்பிரிக்காவிற்கு வெளியே பரவி வருகிறது. சுவீடனில் ஆப்பிரிக்காவில் இருந்து திரும்பிய ஒருவருக்கு இந்த வகை வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதுபோல் பாகிஸ்தானில் 3 பேருக்கு குரங்கு அம்மை வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அவர்கள் ஒருவர் சமீபத்தில் அமீரகத்திலிருந்து பாகிஸ்தான் திரும்பியவர் என தெரியவந்துள்ளது. பாகிஸ்தானில் என்ன வகையான வைரஸ் என்பது குறித்து ஆய்வு செய்யப்படுவதாக கூறப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்