அதே வடிவில் வந்தது புது அபாயம்.. "தொட்டு பேசினாலே மரணம் தான்" - பிறப்புறுப்பில் அறிகுறி

x

ஆப்பிரிக்காவில் சில பகுதிகளில் குரங்கம்மை நோய் தொற்று பரவி வருவதால், சர்வதேச அளவிலான சுகாதார நெருக்கடியாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. இதுகுறித்து விரிவாக பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்...

ஒரு நோயில் இருந்து தற்காத்து கொண்டு இயல்பு நிலைக்கு திரும்புவதற்குள் வணக்கம் டா மாப்ள என வரிசையில் வந்து விடுகிறது அடுத்தடுத்த நோய்கள்..

அந்த வகையில் தற்போது என்ட்ரி கொடுத்துள்ளது எம்பாக்ஸ் எனப்படும் குரங்கம்மை.

கொடிய நோய்த்தொற்று வகையைச் சேர்ந்த குரங்கம்மை, முதலில் காங்கோ நாட்டில் வேகமாக பரவி சுமார் 450 பேரின் உயிரை காவு வாங்கியது.

தற்போது இந்த நோய் தொற்று மத்திய மற்றும் கிழக்கு ஆப்பிரிக்காவின் சில பகுதிகளில் பரவி வருகிறது.

அத்துடன் இந்த வைரசின் புதிய வகை திரிபு மக்கள் மத்தியில் வேகமாக பரவி வருவதோடு, இறப்பு விகிதமும் அதிகரித்துள்ளதால், விஞ்ஞானிகள் கவலையில் உள்ளனர்.

இதில் சோகம் என்னவென்றால், ஆப்பிரிக்காவை கடந்து மற்ற நாடுகளுக்கும் இந்த நோய் பரவி வாய்ப்புள்ளதாக உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் கூறியுள்ளார்.

எனவே நோய்த்தொற்று பரவுவதைத் தவிர்த்து, உயிர்களைக் காப்பாற்றுவதற்கு உலக நாடுகளின் ஒருங்கிணைந்த செயல்பாடு அவசியம் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

கடந்த 2022ஆம் ஆண்டு, குரங்கம்மை பரவியதால் அறிவிக்கப்பட்ட பொது சுகாதார நெருக்கடியானது, கிளேட் 2 வகை வைரஸால் ஏற்பட்டிருந்ததாகவும் ஆனால் இம்முறை அதைவிட மிகவும் ஆபத்தான கிளேட் 1 மற்றும் உருமாற்றம் அடைந்த கிளேட் 1பி என்ற வைரஸ் பரவி வருவதாக சுகாதார வல்லுனர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்

இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து காங்கோ நாட்டில் சுமார் 13,700க்கும் மேற்பட்ட மக்களுக்கு குரங்கம்மை பாதிப்பு ஏற்பட்டு அதில் குறைந்தது 450 பேர் உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது .

குரங்கம்மை நோய் தொற்று ஏற்பட்ட தொடக்கத்தில் காய்ச்சல், தலைவலி, வீக்கம், முதுகுவலி, தசைவலி ஆகியவை ஆரம்பக்கட்ட அறிகுறிகளாக உள்ளது.

இதன் பின் காய்ச்சல் நின்றவுடன் முகத்தில் இருந்து உடலின் மற்ற பகுதிகளில் தடிப்புகள் ஏற்படும் என கூறப்படுகிறது.

பொதுவாக உள்ளங்கைகள், பாதங்கள் வரை பரவுவதோடு, அதிகப்படியான அரிப்பு அல்லது வலியுடன் கூடிய தடிப்புகள் ஏற்பட்டு கொப்பளங்கள் ஏற்படலாம்.

அவை விழுந்த பின்னர் அவை இருந்த இடத்தில் வடுக்கள் தோன்றும்.

இந்தத் தொற்று பொதுவாக 14 முதல் 21 நாட்கள் வரை நீடித்தபின் தானே மறையும். தீவிரமான தொற்றுகளில், காயங்கள் உடல் முழுதும் தோன்றும். குறிப்பாக, வாய், கண்கள், மற்றும் பிறப்புறுப்புகளையும் அவை தாக்கலாம்.

குரங்கம்மை நோய்த்தொற்று உள்ள ஒருவருடன் நெருங்கி பழகினால் தொற்று பரவும் என்பதால், தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுடன் உடலுறவு கொள்வது, தோலோடு தோல் உரசுவது, நெருக்கமாக பேசுவது, அவர்களின் பொருட்களை பயன்படுத்துவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட வேண்டாம் என்பது மருத்துவர்களின் அறிவுறுத்தலாக உள்ளது.

மேலும் விலங்குகள் வாயிலாக இந்நோய் வேகமாக பரவக்கூடும் என்பதால் கூடுதல் எச்சரிக்கை தேவை என்கின்றனர்.

இந்தியாவை பொறுத்தமட்டில் ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்