கொளுத்தும் பாலைவனத்தில் கொண்டாட்டம் நிறைந்த morocco...
ஊர் விட்டு டூர் வந்து பகுதில இன்னைக்கு நாம சுத்தி பாக்க போற இடம் கொளுத்தும் பாலைவனத்தில் கொண்டாட்டம் நிறைந்த morocco...
பாலைவனமா...! வத்தி வரண்ட பாலைவன தேசத்துல அப்டி என்ன செலப்ரேசன் இருக்க போதுனு நெனைக்காதீங்க... வெறும் சுவத்துல... சினிமா போஸ்டர்ஸ்ஸ ஒட்டி கலர்ஃபுல்லா மாத்துற மாதிரி... பரந்து விரிஞ்ச இந்த பாலைவனத்துல தான் ஏகப்பட்ட அட்வெஞ்சர்ஸ் கொட்டிகிடக்கு... அதுனால உடனே டிக்கட்ட புக் பண்ணி morocco நாட்டுக்கு பறக்க ஆரம்பிக்கலாம் வாங்க...
ஊருக்குள்ள வந்ததும் முதல்ல நாம காலடி எடுத்து வச்ச இடம் Marrakech-ல இருக்ற இந்த KOUTOUBIA MOSQE...
12 ஆம் நூற்றான்டுல கட்டப்பட்ட இந்த மசூதி வெறும் வழிபாட்டு தலமா மட்டும் இல்லாம... இந்த சிட்டியோட வரலாற்று சின்னமாவும் இருக்கு.
தொழுகை நடத்துறதுக்கே இப்படி பிரமான்டமான கட்டிடத்த கட்டுன இந்த நாட்டு மன்னர்கள்.. அவங்க அரண்மனைகள மட்டும் என்ன சாதாரனமாவா கட்டியிருப்பாங்க? அதுக்கு ஒரு சூப்பரான sampile தான் இந்த El Badi Palace...
1500 ஆம் ஆண்டோட கடைசி பகுதியில தான் இந்த அரண்மைனைய கட்டி இருகாங்க, இத கட்றதுக்கு பயன்படுத்தப்பட்ட பொருட்கள உலகத்துல இருக்க பல நாடுகள்ள இருந்து இறக்குமதி பண்ணி இருக்காங்கலாம்... உதாரணமா தங்கம் , பளிங்கு கற்கள்னு... கட்டுமானத்துக்கு தேவையான Carrara marble-ஸ்ச இத்தாலில இருந்து கொண்டு வந்திருக்காங்களாம்.
பாலைவனம் நடுவுல திடீர்னு காடு வளர்ந்த மாதிரி இருக்குற இந்த இடத்தோட பேரு... majorelle gardens...
வழக்கமா நிஜத்துல இருக்குற ஏதாவது ஒரு விசயத்த பார்த்து இன்ஸ்பெயர் ஆகி தான் ஓவியமா வரைவாங்க... ஆனா இந்த தோட்டத்த கற்பனையில வரைஞ்சு, கடைசியா அத நிஜமா உருவாக்கியிருக்காங்க. அதோட பலன் தான் இப்போ நாம ரசிச்சுக்கிட்டு இருக்குற இந்த majorelle gardens.
வானத்தை நீல கலர்ல பாத்துருப்பீங்க... கடல்ல நீல கலர்ல பாத்துருப்பீங்க... ஆனா நீல கலர்ல ஒரு ஊரை பாத்துருக்கீங்களா... அப்டி பட்ட ஊரு தான்... CHEFCHAOUEN...
இந்த ஊருல என்ன ஸ்பெசல்னா இந்த வீடுகள்ளோட பெயிண்ட் தான்.
இங்க இருக்குற பெரும்பாலான வீடுகள் உஜாலா ஊத்துன மாதிரி... ப்ளூக் கலர்ல தான் இருக்கும்.... ஒரு வேல சந்தர்ப்ப சூழ் நிலையால வேற கலர் பெயின்ட் அடுச்சாலும், "பெயின்டர் தம்பி எல்லாம் ஓகே , அந்த ஓரத்துல லைட்டா ஃபுளூக்கலர் கோடு மட்டும் போட்டு விட்டுப்பா "