போருக்குள் மூக்கை நுழைக்கும் இந்தியா - எகிப்து அதிபர் மொபைலில் வந்த மோடி - என்ன நடந்தது தெரியுமா..?
இஸ்ரேல் - பாலஸ்தீன போர் விவகாரம் குறித்து எகிப்து அதிபர் அல் சிசியுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் உரையாடினார்.
இரு நாட்டுத் தலைவர்களும் மேற்காசியாவில் நிலவும் பதற்றமான சூழல் குறித்தும், அதனால் அப்பிராந்தியம் மட்டுமல்லாது உலகம் முழுவதிலும் ஏற்பட்டுள்ள தாக்கம் குறித்தும் விவாதித்துள்ளனர். வன்முறை, பயங்கரவாதம், மனித உயிர்கள் பலி குறித்து அவர்கள் தங்கள் கவலைகளைப் பகிர்ந்து கொண்டனர். இஸ்ரேல் பாலஸ்தீன விவகாரத்தில் இந்தியாவின் நீண்டகால நிலைப்பாட்டை பிரதமர் மோடி மீண்டும் வலியுறுத்தினார். பாலஸ்தீன மக்களுக்கான இந்தியாவின் மனிதாபிமான உதவிகள் மற்றும் வளர்ச்சி ஒத்துழைப்புகள் குறித்து எகிப்து அதிபரிடம் பிரதமர் மோடி எடுத்துரைத்துள்ளார். மிக விரைவாக அமைதி மற்றும் நிலைத்தன்மை ஏற்பட வேண்டியதன் அவசியத்தை இருதலைவர்களும் ஆலோசித்தனர்...
Next Story