``இந்தியா ஒன்றும் காத்திருக்கவில்லை'' - முழங்கிய மோடி.. வீட்டுக்கே அழைத்து சென்ற பைடன்

x

அமெரிக்க வாழ் இந்திய மக்களிடையே பேசிய பிரதமர் மோடி ​​இந்தியா வாய்ப்புகளுக்காக காத்திருக்கவில்லை

என்று கூறினார்.

அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி நியூயார்க் நகரில் யூனியன்டேலில் உள்ள கொலிசியம் அரங்கில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான அமெரிக்க வாழ் இந்திய மக்களிடையே உரையாற்றினார். அப்போது பிரதமருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்ட்டது. பின்னர் பேசிய பிரதமர் மோடி அமெரிக்க வாழ் இந்தியர்களின் திறமை, அர்ப்பணிப்பு நிகரற்றவை என்று கூறினார்.

உலகிற்கு AI என்றால் செயற்கை நுண்ணறிவு என்று பொருள் என்றும் ஆனால் தாம் AI என்றால் அமெரிக்க-இந்தியன் என்று நம்புவதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார். இந்த ஆண்டு உலகம் முழுவதற்கும் முக்கியமானது என்றும், சில நாடுகளுக்கு இடையே மோதல் மற்றும் பதற்றம் உள்ளதாகவும் பிரதமர் கூறினார்.

​​இந்தியா வாய்ப்புகளுக்காக காத்திருக்கவில்லை, அதை உருவாக்குகிறது என்றும், மேட் இன் இந்தியா திட்டம் தற்போது 6ஜியில் செயல்படுகிறது என்றும் பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார். அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வீட்டிற்கு அழைத்து சென்று அன்பு காட்டியது தமது இதயத்தை தொட்டு விட்டதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்