இந்தியா உட்பட உலகம் முழுவதும் ரத்து

x

மைக்ரோசாப்ட் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நாடு முழுவதும் இண்டிகோ விமானத்தின் 192 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இண்டிகோ நிறுவனம் அளித்துள்ள விளக்கத்தில், விமானத்தை மீண்டும் முன்பதிவு செய்வது அல்லது பணத்தைத் திரும்பப் பெறுவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பிரச்சினையை தீர்க்க மைக்ரோசாப்ட் வல்லுநர்களுடன், தங்களது குழு இணைந்து செயல்பட்டு வருவதாக கூறியுள்ளது. இதுவரை 192 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக பட்டியலையும் இண்டிகோ வெளியிட்டுள்ளது. இதே போன்று, அமெரிக்க விமான நிறுவனங்களும், தங்களது சேவைகளை ரத்து செய்துள்ளன. அமெரிக்கன் ஏர்லைன்ஸ், யுனைடெட் ஏர்லைன்ஸ், டெல்டா ஏர்லைன்ஸ் உள்ளிட்ட பல அமெரிக்க விமான நிறுவனங்களின் 670க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. தொள்ளாயிரத்திற்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டன. அந்த வகையில் உலகம் முழுவதும் பல்வேறு நிறுவனங்களை சேர்ந்த 2500க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.


Next Story

மேலும் செய்திகள்