நாட்டை உலுக்கிய மணிப்பூர் கலவரம்-அனாதையாக கிடக்கும் 96 உடல்கள்- 2 மாதங்களுக்கு பின் அதிர்ச்சி தகவல்

x

மணிப்பூர் கலவரத்தின்போது பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட பெண்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என மாநில அரசு தெரிவித்துள்ளது.

மணிப்பூர் மாநிலத்தில் கடந்த மே மாதம் ஏற்பட்ட கலவரத்தில் 175 பேர் உயிரிழந்திருப்பதாக மாநில அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதில் 79 பேரின் உடல்கள் உரிமை கோரப்பட்டுள்ளதாகவும், 96 உடல்கள் உரிமை கோரப்படாமல் உள்ளதாகவும் மணிப்பூர் அரசு கூறியுள்ளது. கலவரம் தொடர்பாக 9 ஆயிரத்து 332 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், 325 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மாநில அரசு தெரிவித்துள்ளது. மேலும் கலவரத்தின்போது பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பெண்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்