நிலவில் நொறுங்கிய லூனா-25 - உண்மை காரணத்தை உடைத்த ரஷ்யா

x

லூனா-25 விண்கலம் தோல்வி அடைந்த‌தற்கு எஞ்சினில் ஏற்பட்ட கோளாறே காரணம் என ரஷ்ய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக, இந்தியாவைத் தொடர்ந்து ரஷ்யாவும் லூனா-25 என்ற விண்கலத்தை அனுப்பியது. விண்வெளி ஆராய்ச்சியில் சிறந்து விளங்கும் ரஷ்யா, 47 ஆண்டுகளுக்குப் பிறகு, நிலவை ஆய்வு செய்வதற்காக விண்கலத்தை அனுப்பியதால் எதிர்பார்ப்பு அதிகரித்திருந்த‌து. சந்திரயான்-3 விண்கலத்திற்கு முன்பாக 21ஆம் தேதி தென்துருவத்தில் தரையிறக்க திட்டமிட்டிருந்த நிலையில், 19ஆம் தேதி சிக்னல் கிடைக்காமல் தொடர்பு துண்டானது. அதன் பின்னர், லூனா-25 விண்கலம் நிலவில் மோதி விபத்துக்குள்ளாதனை உறுதி செய்தனர். இந்நிலையில், விபத்துக்கு எஞ்சினில் ஏற்பட்ட கோளாறே காரணம் என தெவிவிக்கப்பட்டுள்ளது. லூனா -25 விண்கலத்தின் கடைசி சுற்றுவட்டப்பாதையை குறைக்கும் முயற்சியை ஒத்தி வைத்திருந்தால், நிலவில் மோதியிருப்பதை தவிர்த்திருக்கலாம் என, ரஷ்ய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் தலைவர் யூரி போரிசோவ் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்