தங்கம் வென்ற வீரர் - போஸ்ட்வானாவில் பொது விடுமுறை
பாரிஸ் ஒலிம்பிக்கில் தங்கள் நாடு தங்கம் வென்றதைக் கொண்டாடுவதற்கு போஸ்ட்வானா அதிபர் பொது விடுமுறை அறிவித்துள்ளார். ஆடவர் 200 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் போஸ்ட்வானா வீரர் லெட்சைல் டெபோகோ (Letsile Tebogo)தங்கம் வென்றார். ஒலிம்பிக்கில் போஸ்ட்வானா வெல்லும் முதல் தங்கப் பதக்கமாகவும் இது அமைந்தது. இந்நிலையில் வெற்றியைக் கொண்டாடும் விதமாக போஸ்ட்வானா அதிபர் மசிசீ அரைநாள் பொதுவிடுமுறை அறிவித்துள்ளார். டெபோகோவின் வெற்றியை மக்கள் கொண்டாட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
Next Story