நல்லெண்ண தூதராக கே.ஜி.அனில் குமார் நியமனம்

x

லத்தீன் அமெரிக்க கரீபின் வர்த்தக கவுன்சிலின் நல்லெண்ண தூதராக, ICL Fincorp நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் கே.ஜி.அனில் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். இந்தியாவின் சர்வதேச நன்னம்பிக்கையை மேம்படுத்தி, சர்வதேச கூட்டு முயற்சிகளை ஊக்குவிக்கும் பணியை செவ்வனே இவர் செய்துள்ளதால் இந்த முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. எனவே, மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் மெக்சிகோ, குவாத்தமாலா, ஹோண்டுராஸ், நிகரகுவா உள்ளிட்ட 33 லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கு இடையே மேம்படுத்தப்பட்ட வர்த்தகம் மற்றும் சுற்றுலா சார்ந்த முக்கிய பிரிவுகளில் இவர் கவனம் செலுத்துவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்