வெள்ளத்தில் மிதந்த சுற்றுலாப் பயணிகள்.. ஹெலிகாப்டரில் வந்து தூக்கிய அதிகாரிகள்

x

கென்யாவில், மழை வெள்ளத்தில் சிக்கிய வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் ஹெலிகாப்டர் உதவியுடன் பத்திரமாக மீட்கப்பட்டனர். அந்நாட்டில், கடந்த திங்கட்கிழமை அதிகாலை ஏற்பட்ட வெள்ளத்தில், வீடுகள், வாகனங்கள், ரயில் தண்டவாளங்கள் அடித்துச் செல்லப்பட்டன. வெள்ளத்தில் சிக்கி ஒரே நாளில் 48 பேர் பலியான நிலையில், 84 பேர் மாயமாகினர். அவர்களை மீட்புக்குழுவினர் தேடி வருகின்றனர். இதனிடையே, கென்யாவின் தென்மேற்கு மாவட்டமான நரோக்கில் உள்ள மசாய் மாரா தேசிய காப்பகத்தில் வெள்ளத்தில் சிக்கித் தவித்த 100-க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகளை ஹெலிகாப்டர் உதவியுடன் மீட்கப்பட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்