அமெரிக்க அதிபர் தேர்தல்.. வெளியான புதிய தகவல்
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஆளும் ஜனநாயக கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக தற்போதைய துணை அதிபர் கமலாஹாரிஸ் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதிபர் தேர்தலில் வேட்பாளராக போட்டியிட ஜனநாயக கட்சி பிரதிநிதிகளிடமிருந்து போதிய ஆதரவை கமலா ஹாரிஸ் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலில் ஐனநாயக கட்சி வேட்பாளராக தாம் இருப்பதில் பெருமை அடைவதாகவும், அடுத்த வாரம் தமது வேட்பாளர் தேர்வை அதிகாரப்பூர்வமாக ஏற்று கொள்ள உள்ளதாகவும் கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.
Next Story