நேரடி விவாதத்தில் ட்ரம்பை கதற கதற வெளுத்து விட்ட கமலா.. ஆடிப்போன அமெரிக்கா

x

முன்னாள் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சீனாவிடம் அமெரிக்காவை விற்று விட்டதாக கமலா ஹாரிஸ் குற்றம் சாட்டியுள்ளார்...

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் கமலா ஹாரிசும், ட்ரம்ப்பும் நேருக்கு நேர் விவாதத்தில் பங்கேற்ற நிலையில்,

சீனாவுடன் வர்த்தக போரில் ஈடுபட்டு ட்ரம்ப் அமெரிக்க பொருளாதாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தினார் என கமலா சாடினார்...

சீன அதிபருக்கு நன்றி தெரிவித்து, டிரம்ப் டுவிட் செய்திருந்தார் என சுட்டிக்காட்டிய அவர்,

ட்ரம்ப் சீனாவிடம் அமெரிக்காவை விற்றுவிட்டதாக குற்றம் சாட்டினார்...

ட்ரம்ப் அதிபர் பதவியில் இருந்து சென்ற போது அமெரிக்காவை எப்படி விட்டுச் சென்றார் என பேசுவோம்... என தெரிவித்த கமலா

மிக மோசமான வேலையில்லா திண்டாட்டம்...ஒரு நூற்றாண்டில் மோசமான தொற்றுநோயை ட்ரம்ப் விட்டுச் சென்றார் என்றும்,

உள்நாட்டுப் போருக்குப் பிறகு நமது ஜனநாயகத்தின் மீதான மிக மோசமான தாக்குதலை ட்ரம்ப் விட்டுச் சென்றுள்ளார்... எனவும் சாடினார்...

மேலும் "நாங்கள் அதை சுத்தம் செய்கிறோம்" எனவும் கமலா குறிப்பிட்டார்...

ஆனால் கொரோனா சமயத்தில் தங்கள் நிர்வாகம் சிறப்பாக செயலாற்றியதாக கமலாவின் குற்றச்சாட்டை ட்ரம்ப் மறுத்தார்...

======


Next Story

மேலும் செய்திகள்