மீண்டும் விவாதம்...ஓகே சொன்ன கமலா ஹாரிஸ் - டிரம்ப் கொடுத்த ரியாக்ஷன்

x

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் கமலா ஹாரிஸ் மீண்டும் டொனால்ட் டிரம்புடன் விவாதம் நடத்த சம்மதம் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தல் நெருங்கி விட்ட நிலையில் ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் துணை அதிபர் கமலா ஹாரிசும், குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்பும் போட்டியிடுகின்றனர். இருவரும் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வரும் நிலையில் கடந்த 10ந்தேதி கமலா ஹாரிஸ் மற்றும் டிரம்ப் இடையே அனல்பறக்கும் விவாதம் நடைபெற்றது. அப்போது அமெரிக்க பொருளாதாரம் , கருக்கலைப்பு சட்டம் , ரஷ்யா உக்ரைன் போர், காசா - இஸ்ரேல் போர் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து இருவரும் விவாதித்து கருத்து மோதலில் ஈடுபட்டனர். இந்நிலையில் CNN தொலைக்காட்சி விடுத்த அழைப்பை ஏற்று வரும் அக்டோபர் 23-ந்தேதி கமலா ஹாரிஸ் மீண்டும் டொனால்ட் டிரம்புடன் விவாதம் நடத்த சம்மதம் தெரிவித்துள்ளார். இந்த விவாதத்தில் டிரம்ப் பங்கேற்பார் என தாம் நம்புவதாகவும் கமலா ஹாரிஸ் சமூகவலை தள பதிவில் குறிப்பிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்