கமலா ஹாரிஸையும் கதிகலங்க விட்ட துப்பாக்கிச்சூடு...! உச்சகட்ட பரபரப்பில் அமெரிக்கா

x

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிசின் தேர்தல் அலுவலகத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நவம்பர் மாதம் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெறும் நிலையில், கமலா ஹாரீஸ் நாடு முழுவதும் சென்று பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். அவருக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் தேர்தல் அலுவலகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அரிசோனா மா காணத்தின் பீனிக்ஸ் நகரத்தில், உள்ள கமலா ஹாரிசின் தேர்தல் அலுவலகத்தில் மர்ம நபர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். எனினும், இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. துப்பாக்கிச் சூடு நடத்திய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்