அமெரிக்கா, கனடாவை பங்கம் செய்த இந்தியா
தேர்தல் முடிவுகளை முடிவு செய்ய நீதிமன்றம் செல்லக்கூடிய நாடுகள், எப்படி தேர்தல் நடத்த வேண்டும்? என இந்தியாவிற்கு அறிவுரை வழங்குவதா? என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கடுமையாக விமர்சித்துள்ளார். அமெரிக்கா மற்றும் கனடாவில் உள்ள ஊடகங்கள் இந்திய தேர்தல் குறித்து எதிர்மறையான செய்திகளை வெளியிட்டு வருவது தொடர்பாக கொல்கத்தாவில் அவர் பேசினார். அப்போது கடந்த இருநூறு ஆண்டுகளாக உலகில் தாங்கள் ஆதிக்கம் செலுத்தியதாக நினைத்து வரும் மேற்கத்திய நாடுகளால் தங்கள் பழைய பழக்கவழக்கத்தை அவ்வளவு எளிதாக விட்டுவிட முடியாது என அவர் விமர்சித்தார்.
Next Story