நடுக்கடலில் மூழ்கிய கப்பல்.. மாயமான பயணிகள் - உலகையே சோகத்தில் ஆழ்த்திய கோரம்
நடுக்கடலில் மூழ்கிய கப்பல்.. மாயமான பயணிகள் - உலகையே சோகத்தில் ஆழ்த்திய கோரம்
தெற்கு இத்தாலி பகுதியில், அகதிகள் சென்ற கப்பல் நடுக்கடலில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இதில் மாயமான 64 பேரை கடலோர காவல்படையினர் தேடி வருகின்றனர்.
துருக்கியில் இருந்து 8 நாட்களுக்கு முன் புறப்பட்ட அகதிகள் கப்பல் ஒன்று மத்திய தரைக்கடலில் தீப்பிடித்து கவிழ்ந்தது. இந்த விபத்து இத்தாலியின் கலாப்ரியாவின் கிழக்கே சுமார் 200 கிலோ மீட்டர் தொலைவில் நடந்ததாகக் கூறப்படுகிறது.
இதில் 64 பேர் கடலில் காணாமல் போயுள்ளனர் என்றும், 11 பேர் மீட்கப்பட்டுள்ளதாக இத்தாலிய கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.
இதேபோல் மற்றொரு கப்பல் விபத்தில், அகதிகள் 10 பேர் உயிரிழந்துள்ளதாகவும், மூழ்கிக் கொண்டிருந்த மரப்படகில் இருந்து 51 பேரை மீட்டுள்ளதாகவும் நதிர் மீட்புக் கப்பலை இயக்கும் ஜெர்மன் நிவாரண அமைப்பு தெரிவித்துள்ளது.