உலகையே திரும்ப வைத்த இஸ்ரேல் முடிவு - காசா போரில் திடீர் திருப்பம்

x

உலகையே திரும்ப வைத்த இஸ்ரேல் முடிவு - காசா போரில் திடீர் திருப்பம்

காசாவில் தினசரி போர் இடைநிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது...

காசாவில் 8 மாதங்களுக்கும் மேலாக தொடர் ராணுவ நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் இஸ்ரேல் படைகளால் மிகப்பெரிய மனிதாபிமான பேரழிவு ஏற்பட்டுள்ளது... பல்லாயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் கொன்று குவிக்கப்பட்டதுடன் பல்லாயிரக்கணக்கானோர் படுகாயமடைந்தனர்... எஞ்சியிருப்போரும் பட்டினியால் வாடி வருகின்றனர்... இந்நிலையில், பாதிக்கப்பட்ட பாலஸ்தீனியர்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்க அனுமதிக்கும் வகையில் தெற்கு காசா பகுதியில் ராணுவ நடவடிக்கை இடைநிறுத்தத்தை இஸ்ரேல் அறிவித்துள்ளது... அடுத்த அறிவிப்பு வரும் வரை ஒவ்வொரு நாளும் காசா நேரப்படி காலை 8 மணி முதல் இரவு 7 மணி வரை ராணுவ நடவடிக்கையை இஸ்ரேல் படைகள் நிறுத்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது... இந்த இடைநிறுத்தம் ரஃபா பகுதியில், தெற்கு காசாவில் உள்ள கெரெம் ஷாலோம் கிராசிங்கிலிருந்து சலா அல்-தின் சாலை மற்றும் கான் யூனிஸ் நகரில் உள்ள ஐரோப்பிய மருத்துவமனை வரை நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது... ஐக்கிய நாடுகள் சபை மற்றும் சர்வதேச நிவாரண நிறுவனங்களுடனான கலந்துரையாடலைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்