இஸ்ரேல் வானை அலறவிட்ட ஈரான்... உலகே மிரளும் போர்...இந்தியா அவசர அறிவிப்பு
இஸ்ரேல் மீது ஈரான் சரமாரியாக ஏவுகணைகளை வீசியதால் மத்திய கிழக்கில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.
லெபனானில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லா தலைவர் நஸ்ரல்லா படுகொலை செய்யப்பட்டார். இதன் தொடர்ச்சியாக லெபனானில் தரைவழி தாக்குதலையும் தீவிரப்படுத்தியுள்ளது. இதற்கிடையே கோபம் கொண்ட ஈரான், இஸ்ரேல் மீது அதிரடியாக ஏவுகணைகளை வீசியது. இஸ்ரேல் முழுவதும் அபாய ஒலி எழுப்பப்பட்டது. மக்கள் பதுங்கு குழிகளில் தஞ்சம் புகுந்தனர். ஈரானில் இருந்து இஸ்ரேல் மீது 180 பாலிஸ்டிக் ஏவுகணைகள் ஏவப்பட்டிருப்பதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது. ஈரான் ஏவிய ஏவுகணைகளை எல்லாம், இஸ்ரேலின் வான் பாதுகாப்பு கட்டமைப்பான அயன் டோம் வானிலேயே சிதைத்தது. ஈரான் தாக்குதலுக்கு பதிலடியை கொடுப்போம் என்று அறிவித்த இஸ்ரேலிய மக்களை பதுங்கு குழிகளை விட்டு வெளியேற கேட்டுக் கொண்டது. ஈரானுக்கு இஸ்ரேல் எப்போது வேண்டும் என்றாலும் பதிலடி கொடுக்கலாம் என்ற சூழலில் மத்திய கிழக்கில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது