இஸ்ரேல் போட்ட அதிரடி உத்தரவு - கொத்து கொத்தாக மடியும் பாலஸ்தீனியர்கள்

x

இஸ்ரேல் ராணுவத்தின் உத்தரவால் கடந்த வாரத்தில் காசாவின் தெற்கே உள்ள நகரமான ரஃபாவிலிருந்து கிட்டத்தட்ட 3 லட்சம் பேர் வெளியேற்றப்பட்டுள்ளதாக பாலஸ்தீன அகதிகளுக்கான ஐநா நிவாரண மற்றும் பணி முகமை தெரிவித்துள்ளது. காசாவில் எந்த இடமும் பாதுகாப்பாக இல்லை என அவ்வமைப்பு கருத்து தெரிவித்துள்ளது... காசாவில் மனிதாபிமான நிலைமை மோசமடைந்து வருவதாக ஐநா கவலை தெரிவித்துள்ளது... காசாவில் இஸ்ரேல் படைகளின் தாக்குதலால் இதுவரை 35 ஆயிரத்து 34 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்... மேலும், 78 ஆயிரத்து 755 பாலஸ்தீனியர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். மேலும் இடிபாடுகளுக்கடியில் சிக்கியுள்ள ஏராளமானோரின் நிலைமை என்ன ஆனது என்பது கேள்விக்குறியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்