இந்தியர்களை உளவு பார்க்க இஸ்ரேல் கருவி - மத்திய அரசின் மாஸ்டர் பிளான்
லண்டனில் இருந்து வெளியாகும் பிரபல நாளிதழலான பைனான்ஸியல் டைம்ஸில், மோடி அரசின் கண்காணிப்பு திட்டங்கள் பற்றி ஒரு ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது. இஸ்ரேலைச் சேர்ந்த காக்னைட் மற்றும் செப்டியர் போன்ற டெக் நிறுவனங்களிடம் இருந்து, மிக நவீன தொழில்நுட்பத் தை கொண்டு, பெரிய அளவில் ஒட்டுக் கேட்கும் கருவிகளை இதற்காக கொள்முதல் செய்துள்ளதாக கூறியுள்ளது. வெளிநாடுகளில் இருந்து கடலுக்கு அடியில் பதிக்கப்பட்டுள்ள கேபிள்கள் மூலம் இந்தியாவிற்கு தொலைதொடர்பு மற்றும் இணைய சேவைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
கடலுக்கு அடியில் நிறுவப்பட்டுள்ள இத்தகைய கேபிள்கள், இந்திய கடற்கரை பகுதியில் உள்ள கேபிள் இணைப்பு மையங்களில் முடிவடைகின்றன. இந்த கேபிள் இணைப்பு மையங்கள் மற்றும் டேட்டா மையங்களில், இஸ்ரேலிய நிறுவனங்களிடம் இருந்து வாங்கப்பட்ட உளவு கருவிகள் மற்றும் சிஸ்டம்களை பொருத்தி, அதன் மூலம், 140 கோடி இந்தியர்களின் தொலைதொடர்புகள் மற்றும் தனிப்பட்ட தகவல்களை மத்திய அரசு சேகரிப்பதாக இந்த அறிக்கை கூறுகிறது. இஸ்ரேலின் செப்டியர் நிறுவனம், ரிலையன்ஸ் ஜியோ, ஓடோபோன் ஐடியா, சிங்கப்பூரின் சிங்டெல் உள்ளிட்ட பல்வேறு டெலிகாம் நிறுவனங்களுக்கு, இத்தகைய உளவு கருவிகளை விற்பனை செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் சந்தாதரர்களின் குரல் அழைப்பு, வாட்ஸப் தகவல்கள், இணைய பயன்பாடு, மின்மடல்கள் ஆகியவற்றை சேகரிக்க வகை செய்யப்பட்டுள்ளது. இத்தகைய கண்காணிப்பு கருவிகளை, டெலிகாம் நிறுவனங்கள் கொள்முதல் செய்து, அவற்றை நிருவ வேண்டும் என்று மத்திய அரசின் விதிமுறைகள் வற்புறுத்துவதாக இந்த அறிக்கை கூறுகிறது.
இதே போன்ற கண்காணிப்புகளை அமெரிக்கா மற்றும் பிரிட்டன் அரசுகள் செயல்படுத்துவதை 2013ல் ஸ்னொடன் என்ற செயல்பாட்டாளர் அமல்படுத்தியது ஒப்பிடத்தக்கது. 2019ல் எதிர்கட்சி தலைவர்கள், பத்திரிக்கையாளர்கள்மற்றும் செயல்பாட்டாளர்களின் செல்போன்களை, பீகாஸ்தொழில்நுட்பத்தின் மூலம் மத்திய அரசு உளவு பார்த்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தது குறிப்பிடத்தக்கது.