"போர் நிறுத்த அறிவிப்பு " இஸ்ரேல் போட்ட கட்டளை..! ஷாக்கான காசா மக்கள்

x

பல்வேறு நாடுகளின் நடத்திய பேச்சுவார்த்தையின் பயனாக, 4 நாட்கள் தற்காலிக போர் நிறுத்தத்திற்கு ஹமாஸ் - இஸ்ரேல் ஒப்புக்கொண்டுள்ளன. மேலும் போர் நிறுத்த ஒப்பந்தத்தின் கீழ் சிறையில் உள்ள 150 பாலஸ்தீனியர்களை விடுவிக்க இஸ்ரேல் ஒப்புக்கொண்டுள்ளது. அதே போன்று, பணய கைதிகளாக பிடிக்கப்பட்ட இஸ்ரேலியர்கள் 50 பேரை விடுவிக்க ஹமாஸ் ஒப்புக்கொண்டுள்ளது. இதனிடையே, போர் நிறுத்த ஒப்பந்தம் எப்போது அமலுக்கு வரும் என்பது தெரியாததால், காசா மீதான தாக்குதல் தொடரும் என இஸ்ரேல் ராணுவ தலைமை செய்தி தொடர்பாளர் டேனியல் ஹிகாரி தெரிவித்துள்ளார். சண்டையை எப்போது நிறுத்த வேண்டும் என்பது ராணுவத்திற்கு தெரியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்


Next Story

மேலும் செய்திகள்