நெதன்யாகு வீட்டு பெட்ரூமை குறிவைத்த ஹிஸ்புல்லா ட்ரோன்
நெதன்யாகு வீட்டு பெட்ரூமை குறிவைத்த ஹிஸ்புல்லா ட்ரோன்
இஸ்ரேல் - ஹிஸ்புல்லா போருக்கு மத்தியில் சனிக்கிழமை ஹிஸ்புல்லா ஏவிய ட்ரோன் சேரியாவில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வீட்டில் விழுந்து வெடித்தது. இதற்கு ஹிஸ்புல்லா இயக்கம் பொறுப்பு ஏற்றது. தாக்குதல் ஈரானிய ஏஜெண்ட்கள் வேலை என குற்றம் சாட்டிய பெஞ்சமின் நெதன்யாகு, இஸ்ரேலியர்களுக்கு தீங்கு விளைவிப்பவர்கள் பெரிய விலை கொடுப்பார்கள் என எச்சரித்தார். இந்த சூழலில் நெதன்யாகு வீட்டில் அவரது பெட்ரூம் கண்ணாடி ஜன்னலில் ட்ரோன் விழுந்ததாகவும், அதிலிருந்து சிதறிய கண்ணாடிகள் அங்கிருந்த நீச்சல் குளத்திலும், வெளியேயும் விழுந்ததாகவும், பாதுகாப்பு கட்டமைப்பு காரணமாக ஏவுகணையால் உள்ளே செல்ல முடியவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதல் நடந்தபோது யாரும் இல்லாததால் எந்த பாதிப்பும் இல்லை என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதற்கிடையே லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இருக்கும் ஈரானிய தூதரக அதிகாரிகளுக்கு தாக்குதலில் தொடர்பு இருப்பதை இஸ்ரேலிய அதிகாரிகள் கண்டறிந்து இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.