இஸ்ரேல் தலையில் விழுந்த பேரிடி!..இருபக்கம் இருந்து வரும் குண்டுகள் - பலியாகும் மக்களின் உயிர்

x

காசா மீதான இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு நிறுத்தப்படும் போது மட்டுமே இஸ்ரேலுக்குள் ஹிஸ்புல்லா நடத்தும் தாக்குதல் நிறுத்தப்படும் என்று லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார்...ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா, பாலஸ்தீனத்தில் ஹமாசுக்கு ஆதரவாக லெபனானின் தெற்கு எல்லையில் இஸ்ரேலிய ராணுவத்துடன் துப்பாக்கிச் சூடு நடத்தி வருகிறது. காசாவில் முழு போர்நிறுத்தம் ஏற்பட்டால் மட்டுமே தங்கள் ஹிஸ்புல்லா அமைப்பு துப்பாக்கிச் சண்டையை நிறுத்தும் என்று அவ்வமைப்பின் தலைவரான சையத் ஹசன் நஸ்ரல்லா தெரிவித்துள்ளார். எல்லை தாண்டி இஸ்ரேலுக்கும் ஹிஸ்புல்லாவுக்கும் இடையே நடந்த மோதலில் ஏற்கனவே லெபனானில் சுமார் 200 பேர் கொல்லப்பட்டுள்ளனர்... அவர்களில் 170க்கும் மேற்பட்டோர் ஹிஸ்புல்லா போராளிகள், 10 இஸ்ரேலிய வீரர்கள் மற்றும் 5 இஸ்ரேலிய பொதுமக்களும் கொல்லப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்