இஸ்ரேல் அறைகூவல்.. ஹமாஸ்-க்கு எதிர்பாரா மரண அடி
ஐஎஸ்எஸ் போன்று கொடூர கொலைகளை ஹமாஸ் அமைப்பு செய்வதாக இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு குற்றம் சாட்டியுள்ளார். அமைச்சரவை கூட்டத்திற்கு பின்னர் உரையாற்றிய அவர், குழந்தைகள் உட்பட குடும்பம் குடும்பமாக கட்டி வைத்து கொலை செய்யப்படுவது, ஐஎஸ்ஐஎஸ் அமைப்பை பிரதிபலிப்பதாக கூறியுள்ளார். ஹமாஸ் அமைப்பும் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புதான் என்பதை ஒட்டுமொத்த உலகமும் அறிந்துள்ளதாக கூறியுள்ள நேதன்யாகு, அவர்கள் செய்துள்ள பல பயங்கரங்களை விவரிக்க முடியவில்லை என தெரிவித்துள்ளார். போரை நாங்கள் தொடங்கவில்லை என்றும், ஆனால், போரை முடித்து வைப்போம் என்றும் உறுதிப்பட கூறியுள்ளார்.
Next Story