மண்ணில் சரிந்தது ஹிஸ்புல்லாவின் முக்கிய "தலை" - உலகுக்கு பிரகடனப்படுத்திய இஸ்ரேல்
லெபனானில் இஸ்ரேலியப் படைகள் கடந்த 24 மணி நேரத்தில் நடத்திய தாக்குதலில் 92 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. பெய்ரூட்டில் நடந்த வான்வழித் தாக்குதலில், ஹிஸ்புல்லா வான்படை கமாண்டர் முகமது உசேன் ஸ்ரோர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், ஐ.நா. மாநாட்டிற்கிடையே, இஸ்ரேல் - ஹிஸ்புல்லா மோதல் தொடர்பாக அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் பேச்சுவார்த்தை நடத்தின. அப்போது, அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தும் வகையில், 21 நாட்கள் போர் நிறுத்தம் அறிவிக்க வலியுறுத்தின. எனினும், இஸ்ரேல் மூத்த அதிகாரிகள் இதனை நிராகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே, போரை நிறுத்தும் வகையில், இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் வழங்குவதை சர்வதேச சமூகம் நிறுத்திக்கொள்ள வேண்டுமென பாலஸ்தீன அதிபர் முகமது அப்பாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.
Next Story