உலகையே நடுங்க வைத்த நெதன்யாகு போட்ட உத்தரவு - சுற்றி வளைத்த படை.. யாருமே எதிர்பாரா போர்
லெபனானில் ஹிஸ்புல்லா நிலைகளை குறிவைத்து தாக்குதல் நடத்துவதாக இஸ்ரேல் தொடர்ந்து தாக்கி வருகிறது. 600-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில் இருதரப்பும் சண்டையை நிறுத்த அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. இந்த சூழலில் லெபனானில் முழு படைப்பலத்தோடு தாக்குதலை தொடருமாறு இஸ்ரேல் ராணுவத்திற்கு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உத்தரவிட்டுள்ளார். சிரியா - லெபனான் எல்லையிலும் இஸ்ரேல் விமானப்படை தாக்குதலை நடத்தியிருக்கிறது. ஹிஸ்புல்லாவுக்கு ஆயுதங்கள் வருவதை தடுக்க லெபனான் - சிரியா எல்லையில் தாக்குதல் நடத்துவதாகவும், ராணுவ உள்கட்டமைப்பு, பலம் எல்லாம் சிதைக்கப்படும் என இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. இதற்கிடையே வடக்கு இஸ்ரேலில் இஸ்ரேல் ராணுவ தளங்களை குறித்து தாக்குதல் தொடர்வதாக ஹிஸ்புல்லா தரப்பு தெரிவித்துள்ளது.
Next Story